மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்று திரள்வோம்.

உணவூத் தன்னாதிக்கத்திற்கான பாத யாத்திரை – 2017

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட காலமாக கௌரவமான வாழ்க்கைக்கு மிகவூம் அவசியமான தமது காணி உரிமையை உறுதி செய்யூமாறு அதிகாரத்திற்கு வந்த அனைத்து ஆட்சியாளர்களையூம் வற்புறுத்தி வந்துள்ளனர். எனினும் அதிகாரத்திற்கு வந்த எந்த ஒரு அரசும்; இவ்விடயம் சம்மந்தமாக எவ்வித கவனமும் செலுத்தவில்லை. ஆகவே காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு மலையக மக்களின் காணி உரிமையை உறுதி செய்யூமாறு தொடர்ந்து பல வருடகாலங்களாக குரல் கொடுத்து வருகிறது.
ஓவ்வொரு வருடமும் ஒக்டோம்பர் மாதம் 16 ம் திகதி நினைவூ கூறப்படும் உலக உணவூ தினத்திற்கு சமாந்தரமாக மொன்லார் அமைப்பின் மூலம் செயற்படுத்தப்படும் உணவூத் தன்னாதிக்கத்திற்கான மக்கள் பாதயாத்திரை இவ்வருடம் மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்ட இப் பாத யாத்திரையின் போது அவர்களது பிரதான உரிமைகள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு அழுத்தங்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளை மலையகப் பிரதேசம் முழுவதும் முன்னெடுத்தல் முக்கிய கருப்பொருளாகவூள்ளது.

காணி உரிமையை உறுதி செய்தல்.

எமது நாட்டில் தேயிலை பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்களாகின்றது. எனினும் அதற்காக நெற்றி வியர்வை சிந்தி தமது வாழ்க்கையை அர்பணித்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பரம்பரையினர் நிரந்தர வீடு வாசல்களின்றி 400 சதுர அடிகளுடன் கூடிய லயன் அறைகளில் அடிமைகளாக வாழ்கின்றனர். இது முடிவூக்குக் கொண்டுவர வேண்டிய விடயமாகும். ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளவூம். குடும்பத்திற்குத் தேவையான வீட்டுத்தோட்ட உணவை உற்பத்தி செய்து கொள்ளவூம் குறைந்த பட்;சம் 20 பேர்ச் காணி உறுதிப் பத்திரங்களுடன் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.


பெருந்தோட்டத்துறையிலுள்ள அரச சொத்துக்களை விற்பனை செய்வதை உடனே நிறுத்து!

பெருந்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC) மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட கம்பனி என்பவற்றுக்குச் சொந்தமான காணிகள் தொழிற்சாலை உத்தியோகப+ர்வ பங்களாக்கள் உட்பட பல சொத்துக்கள் பகுதி பகுதிகளாகப் பிரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து இந்த நிறுவனங்களை மூடிவிட அரசு முயற்சி செய்து வருகின்றது. தொழிலாளர்கள் தொழில் மற்றும் உயிர் வாழும் உரிமையை இழந்துவிடும் அச்சுருத்தலுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எனவே தொழிலாளர்கள் இன்னும் சில காலங்களில் வீதியில் இறங்கி பிச்சை எடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுவது நிச்சயமாகும்.
1972-1995 ஆண்டளவில் தேயிலைப் பயிர்ச் செய்கை விளைச்சல் குறைந்து சென்றுஇ மண் செழிப்பற்றுப் போய் நட்டத்தில் இருக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருந்தது. அச்சந்தர்ப்பத்தில் தோட்டங்கள் தேசிய மயப்படுத்தப்பட்டது. எனினும் தேயிலை விற்பனை மற்றும் ஏற்றுமதி என்பவை கம்பனிகளின் கைகளிலேயே இருந்தன. ஊழல் ஆட்சி முறை மற்றும் 1970 கால கட்டத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியினுள் இத்தோட்டத்துறை மேலும் அழிவை நோக்கிச் சென்றதோடு 1992–1995 வருட காலங்களில் மீண்டும் தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டது. மிகவூம் மோசமானஇ விளைச்சல் குறைந்த 39 தோட்டங்கள் JADB/SLSPC) அரச நிறுவனங்களிடம் மிஞ்சியது அன்று தொடக்கம் எவ்வாறேனும் இத்தோட்டங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்தல் வளங்களை கொள்ளையடித்தல் என்பன ஆட்சியாளர்களின் பிரதான நோக்கமாக அமைந்தது. இன்றைய அரசு அச்செயற்பாடுகளை மேலும் வேகமாக்கி உள்ளது. மிக மோசமான நிர்வாக முறைகள் அதிகமான தோட்டங்களின் அழிவை நோக்கிச் செல்ல காரணமாக உள்ளது. இதற்கு எவ்வகையிலும் அப்பாவித் தொழிலாளர்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அல்ல என்றே கூற வேண்டும்.


கொள்ளையடிக்கப்பட்ட EPF/ETF மற்றும் சேவைக்கால கொடுப்பனவூகளை உடனே பெற்றுக் கொடு

அரசின் மூலம் நிர்வாகிக்கப்படும் தோட்டங்களில் 20 வருடங்களுக்கும் மேலாக தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊழியா; சேமலாப நிதிஇ நம்பிக்கை பொறுப்பு நிதி (EPF/ETF) சேவைக்காலப்பணம் என்பன உரிய முறையில் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இந்த நிதியின் அளவூ 83 கோடிக்கும் அதிகமாகும். சில தொழிலாளர்கள் இவற்றைப் பெறாமலேயே மரணத்தை தழுவி அவர்கள் தேயிலைச் செடிகளின் கீழ் புதைக்கப்படுகின்றனர்.<
வீடு உட்பட இன்னும் சில தேவைகளுக்காக பெற்றுக் கொண்டுள்ள பணம் தொழிலாளர் சம்பளத்தில் இருந்து கழித்து எடுக்கப்பட்டிருந்தாலும் அவை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்க தோட்ட முகாமைத்துவம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடா;ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளா;களின் நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்து!

இன்று நாட்டில் ஒரு சாதாரண தொழிலாளியின் சம்பளம் 1500 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரையாகும். எனினும் ஒரு தோட்டத் தொழிலாழியின் ஒரு நாளைய சம்பளம் 530 ரூபா மட்டுமே. இதனைக் கொண்டு ஒரு குடும்பத்தை நடாத்துவது எவ்வாறு? வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை உணவூப் பொருட்கள் உட்பட அனைத்தையூம் வெளியில் இருந்து கொள்வனவூ செய்யவேண்டியூள்ளதால்இ தோட்டத் தொழிலாளர்களுக்கிடையே மந்த போஷன நிலை உயர்ந்து சென்று நோய் நொடிகள் அதிகரித்துள்ளது. பிள்ளைகளின் கல்வி; நிலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்ப்படுத்த வேண்டுமாயின் ஒரு தோட்டத் தொழிலாளியின் நாட்சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும்.

தேயிலைப் பயிர்ச் செய்கைக்காக “கிளைபொசெட்” தடையை அகற்ற வேண்டாம்!

“கிளைபொசெட்”உட்பட களைக்கொள்ளிஇ கிருமி நாசினிஇ இரசாயனப் பசளை போன்றவை காரணமாக விவசாயிகள் சிறு நீரக நோய்இ புற்று நோய்இ தோல் நோய்இ சுவாச நோய் உட்பட அடையாளம் காணப்படாத பல்வேறு நோய்களுக்கு உட்படுவதுஇ முழு நாடும் அறிந்த விடயமாகும். மேலும் இந்த நச்சுப் பொருள்கள் காரணமாக நீர் மாசடைதல்இ மண் அரிப்புஇ மண் செழிப்பற்றுப் போதல் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்து செல்லல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாகியூள்ளன. இன்று பெருந்தோட்டப் பிரதேசத்தில் இருந்து தினந்தோறும் இரவூ வேளைகளில் மகரகம மருத்துவ மனையை நோக்கி பஸ் வண்டிகளில் மக்களை அழைத்துச் செல்லும் அளவூக்கு நிலைமை பயங்கரமானதாக உள்ளது. தற்பொழுது தடைசெய்பட்டுள்ள “கிளைபொசெட்” இரசாயனத்தை தோட்டங்களுக்கு மட்டும் விநியோகிக்க முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கை எந்தவிதமான பெறுமதியூம் இல்லாத காரணத்தினாலா? என வினவ வேண்டியூள்ளது. சிறு இயந்திரங்கள்இ மற்றும் ஏனைய விவசாய முறைகளைப் பயன்படுத்தி களைக் கட்டுப்பாட்டை செய்யாதிருப்பது தொழிலாளர்களுக்கு அதற்காக சம்பளம் வழங்க வேண்டி வருவதன் காரணத்தினாலேயே.


பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை சுற்றாடலுக்குச் சாதகமானஇ மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு தேசிய கொள்கையை கட்டியெழுப்புவோம்.

இந்நாட்டின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டிருப்பது அதிக கூறுணர்வூடன் கூடிய மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்திருந்த உயிர்க் கட்டமைப்புக்களை அழித்தொழித்து ஒற்றை வகைப் பயிர்ச் செய்கையை அடிப்படையாகக் கொண்டேயாகும். முதலில் கோப்பியூம் இரண்டாவதாக தேயிலையூம் பயிரிடப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு சுற்றாடல்இ பொருளாதாரஇ சமூக அனர்த்தங்களுக்கு எமது நாடு முகம் கொடுத்துள்ளது.
இதனடிப்படையில் பார்க்கும் போது இன்றைய பெருந்தோட்ட பயிர்ச் செய்கை துறையை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பது தௌpவாகும். பரிப+ரணமான மறுசீரமைப்பு இதற்கு அவசியமாக உள்ளது. அது தொடர்பாக எமது முன்மொழிவாக ஒற்றை வகை தேயிலை பயிர்ச் செய்கைக்குப் பதிலாக சுற்றாடலுக்குச் சாதகமான வன பயிர்ச் செய்கையூடன் கூடிய கூட்டுப் பண்னைக் கட்டமைப்பபு அடிப்படையில் மத்திய மலையகப் பிரதேசத்தை மாற்றியமைப்பதாகும். இது நீர்இ போஷாக்கு கட்டமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும்
இவ்வாறான ஒரு மாற்றத்தைச் செய்யமுடிவதென்பது தொழிலாளர் பங்களிப்புடன் கூடிய உற்பத்தி உரிமைஇ முகாமைத்துவம் என்பவற்றை அவர்களிடம் ஒப்படைக்கும் ஒரு செயல் முறையின் மூலமேயாகும். இதற்காக மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு தேசிய கொள்கையைஇ உபாய மார்க்கத்தை கட்டியெழுப்புமாறு நாங்கள் அரசை வற்புறுத்துகின்றௌம்

நிகழ்சி நிரல்

திகதி
ஓகடோம்பர்
இடம் நிகழ்சி
1 மாத்தலை மக்கள் மட்டதொழிள் சங்க அறிவூறுத்தல்
6 ஹட்டன் செய்தியாளர் மாநாடு
8 அப்புத்தலை
மாத்தலை
ஆர்ப்பாட்டம்
கை ஓப்பம் திரட்டு சித்திரப் போட்டி
9 நாவலப்பிட்டி பாரண்டா தோட்டம்
அப்கட்
சத்தியாக்கிரகம்
துண்டுப்பிரசுர வினியோகம்
10 நாவலப்பிட்டி
பாரண்டா தோட்டம்
ஹட்டன்
சத்தியாக்கிரகம்,அறிவூறுத்தல் நிகழ்சி
கை ஓப்ப திரட்டு
துண்டுப்பிரசுர வினியோகம் போஸ்டர்
11 கண்டிஇ கலஹ
மஸ்கெலியா
மாத்தலை
மக்கள் ஆர்ப்பாட்டம்
போஸ்காட் நிகழ்சி
துண்டுப்பிரசுர வினியோகம்
துண்டுப்பிரசுர வினியோகம் அறிவூறுத்தல் நிகழ்சி
12 ஹட்டன்
கண்டிஇ கலஹ
தொழிற்சங்க தலைவர்கள்இ சிவில் அமைபபுக்கள அறிவூறுத்தல்
எல்லா தோட்டங்களிலும் துண்டுப்பிரசுர வினியோகம்
13 கொழும்பு மக்கள் மாநாடுஇ பாத யாத்திரை


மலையக மக்களின் உயிர் வாழும் உரிமைக்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒன்று திரள்வோம்.