கூஇந்த இக்கட்டான சூழ்நிலையில் மனிதத்துவத்திற்காக முன் நிற்கும் சுதந்திரம் பாதுகாப்பு மற்றும் நீதி என்பவற்றுக்காக மக்கள் அதிகாரத்தை கட்டியெழுப்பும் ஒரு மக்கள் அமைப்பை கட்டியெழுப்புவோம்.!

2019/05/07


ஏப்ரல் 21 ம் திகதி இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதல் ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு சமயத்திற்கோ எதிராக தொடுக்கப்பட்ட தாக்குதலன்றி மனிதத்துவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதலென்றே கூற வெண்டும். அது போன்ற தாக்குதல்கள் மூலமும்இ பின்பு தொடுக்கப்பட்ட பதில் தாக்குதல்களின் மூலமும் அதிகமான சந்தர்ப்பத்தில் அழிந்து செல்வது மனித நேயமேயாகும். பயங்கரவாதிகளின் தேவையூம் அதுவேயாகும். ஆகவே மிக இக்கட்டான இச் சந்தர்ப்பத்தில் நாம் மிகப்பலமாகவூம்இ நம்பிக்கையோடும். மனிதத்துவதற்காகவூம் அன்பிற்காகவூம் முன் நிற்க வேண்டி உள்ளோம் .

இத்தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்தும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்தவிதமான முயற்சியையூம் மேற்கொள்ளாத அரசு உயிர் நீத்த மற்றும் காயங்களுக்கு உள்ளான அனைத்து மக்களது உயிர்களுக்கும் பொருப்புக் கூற வேண்டும் என வலியூறுத்திக் கூறுகிறௌம். இக் குற்றத்தை அரச ஊழியர்கள் மீது சுமத்தி தப்பித்துக் கொள்ள அரசுடன் சம்பந்தப்பட்ட எத்தரப்பினராலும் முடியாது. இன்றைய அரசு மட்டுமன்றி எல்லாவிதமான தீவிரவாத கொள்கைகளையூம் செயற்பாடுகளையூம் சுதந்திரமாக வளர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கிஇ சில சந்தர்ப்பங்களில் அரச அனுசரனையையூம் கூட பெற்றுக் கொடுத்து இனக் குழுக்களுக்கிடையே சந்தேகம்இ நம்பிக்கையின்மை போன்றவற்றின் வளர்சிக்கு பங்களிப்பை நல்கிய எல்லா அரசாங்கங்களும் இத்தாக்குதளுக்கு பொருப்புக் கூற வேண்டும்.

இந்த கவலைக்குறிய நிகழ்வின் மூலம் ;காட்டி நிற்பது சாதாரன மக்களின் பாதுகாப்பு அல்லது இனங்களுக்கிடையே ஒற்றுமை என்பவற்றை கட்டியெழுப்பும் விடயத்தில் இன்றைய பிரபுத்துவ அரசியல் வர்க்கத்தினரின் தோல்வியையேயாகும். இன்றைய ஆட்சியாளர்கள் சந்தை வளர்ச்சிக்கு காட்டி நிற்கும் ஆர்வத்தில் கடுகளவையேனும் சாதாரன மக்களின் நல்வாழ்வூ அல்லது பாதுகாப்பு என்பவற்றில் ஆர்வம் கொள்ளவில்லை என்பது இச்சம்பவத்தின் மூலம் தௌpவாகின்றது. ஆதலால் தொடர்ந்தும் பிரபுத்துவ அரசியல் வர்க்கத்தினரின் அதிகாரத்தை பலப்படுத்தும் பொறிகளில் சிக்கிவிடாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டை நோக்கி உடனடியாகச் செல்ல வேண்டியூள்ளோம்.

பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான சட்ட திட்டங்களை பலப்படுத்தல் தொடர்பான தேவை மீண்டும் வலியூறுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் திரு ரனில் விக்ரமசிங்ஹ உத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை மிக அவசரமாக முன் கொண்டு வருவது பற்றிய தேவையை பல தடவைகள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். தற்பொழுது சட்டமாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் மற்றும் மக்கள் பாதுகாப்பு சட்ட திட்டங்களில் அரச விரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான பரந்த அளவிலான அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது பயங்கர வாதத்திற்கு எதிரான சட்டம் பயங்கரவாத நடடிவக்கைகளை தடுத்து நிறுத்துவற்கு அப்பால் சென்று மக்களது அடிப்படை உரிமைகள் உற்பட அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் நீதியான போராட்டங்களை அடக்குவதற்காக பயன்படுத்தும் பல உதாரணங்களை இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த 30 வருட கால கட்டத்தில் எம்மால் கண்டு கொள்ள முடிந்தது. அன்மையில் இலங்கையில் நடந்த அசம்பாவிதத்தை பயன்படுத்தி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அல்லது மற்றுமொரு அடக்கு முறையிலான சட்டத்தை முன்கொண்டு வருவதற்காக அரசு மேற்கொள்ளும் முயற்சியை தோட்கடித்தல் மிக அத்தியாவசிய தேவையாக உள்ளது. இன்றைய நிலைமையினுல் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள்இ தொழிலாளர் உரிமைகள்இ கிராமிய மக்கள் முகம் கொடுத்து வரும் நுண்கடன் பிரச்சினைஇ காணி உரிமைஇ அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டங்கள் முழுமையாகவே செயலிழந்துள்ளன. மக்களது மனங்களில் தற்பொழுது எற்பட்டுள்ள அச்சத்தை பயன்படுத்தி இப் போராட்டங்களை தடுத்து நிறுத்தும் முயற்சியை அரசு தொடர்ந்து மேற்கொள்ளக் கூடும்.

விஷேடமாக வட கிழக்குப் பிரதேச யூத்தம் காரணமாக பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் வாழும் மக்கள் நீதிக்காக முன்னெடுக்கும் போராட்டங்கள் முழுமையாகவே தடைப்படக்கூடிய ஆபத்தையூம் காண முடிகிறது. மக்களுக்க தமது அடிப்படை உரிமைகள் கிடைக்காமல் போகும் போது பயங்கரவாதத்திற்கு தேவையான பின்புலம் உருவாகும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ள நாம் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக மக்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக முன்னெடுக்கப்படும் போராட்டம் எவ்வகையிலம் தடைப்படக் கூடாது என்பது எமது நம்பிக்கையாகும்.

இத் தாக்குதல் தொடுக்கப்பட்ட காலகட்டத்தில் நாட்டில் பாரிய அளவிலான பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. விஷேடமாக தொழிலாளர்கள்இ விவசாயிகள்இ மீனவர்கள் போன்ற வகுப்பினர் இன்று பெரும் தாக்கங்களுக்கு உற்பட்டுள்ளனர். தோல்வியான பொருளாதார திட்டங்களை தொடர்ந்தும் மக்களிடையே பலாத்காரமாக கொண்டு சென்று; ஆட்சியாளர்கள் அவர்களது சொந்த நலன் பற்றியே சிந்தித்தனர். பெரும்பான்மையினரான நாம் இந்த தோல்வியான பொருளாதார முறையினுல் கடும் சுரண்டலுக்கு உட்பட்டு வாழ்ந்து வந்தோம். முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசிரமைப்புக்களின் மூலம் எவ்வகையிலும் உண்மையான பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களால் தீர்வினைப் பெற்றுத் தர முடியாது. காரணம் அவர்கள் சென்று கொண்டிருப்பது மக்களுக்கு பாதகமான இ அவர்களுக்கு இலாபம் கிடைக்கும் பொருhளதார மார்க்கத்திலேயே.

இதற்கு எதிராக குரல் கொடுப்பதும் இச் சந்தர்ப்பத்தில் எமது பொருப்பாக நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி உள்ளது. பயங்கரவாதத்தை தோட்கடிக்க முடிவது சாதாரண மக்கள் பயங்காரவாதத்pற்கு எதிராக கிளர்ந்தெழுந்தால் மட்டுமே. விஷேடமாக முஸ்லிம் தீவிரவாத குழுக்களை தோட்கடிக்கும் பொருப்புஇ மற்றும் திரன் இருப்பது சாதாரன முஸ்லிம் மக்களிடமேயாகும் அதற்காக அவர்களது உள்ளங்களில் பெரும் பான்மை மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பாக உள்ள நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் சாதாரண முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன் முறையை தொடுத்தல்இ அவர்களை புறக்கனித்ல் அல்லது வேறு விதத்திலான துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் அவர்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவான நிலையை நோக்கித் தள்ள காரணமாக அமையூம். ஆதலால் சமாதானத்தை விரும்பும் சாதாரன முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொருப்பு தமிழ் சிங்கள மக்களுக்கு உரித்தான ஒரு காரியமாகும்.

பயங்கரவாதம் இயற்கையாக அல்லது தானாக உருவான ஒன்றல்ல. அரபு நாடுகளின் எண்ணை வளங்களை கொல்லையடிப்பதற்காக அமெரிக்கா உற்பட ஐரோப்பிய நாடுகளால் ஏற்படுத்திய மோதல்களுக்கும் பலாத்காரத்திற்கும் எதிராக மேலெழுந்த ஆயூதப் போராட்டங்கள் இன்று பயங்கரவாத நடவடிக்கைகளை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. ஹமாஸ்இ ஹிஸ்புல்லா போன்ற மக்கள் அமைப்புக்களாக கட்டியெழுப்பப்பட்டு ஆரம்பமான இப்போராட்டங்கள்; இன்று ஐளுஐளு போன்ற மிலேட்சத்தனத்துடன் கூடிய பயங்கரவாதம் வரை சென்றுள்ளது . பயங்கரவாதத்தை உருவாக்கல் மற்றும் அவற்றை அடக்கி வைத்தல் எனும் நடவடிக்கையினுல் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தேவைகள் உள்ளடங்கி இருப்பது இரகசியமான விடயமல்ல .

இனக் குழுக்களுக்கிடையே உண்மையான புரிந்துணர்வை கட்டியெழுப்ப முடிவது ஒவ்வொருவரினது உரிமைகளுக்காக பொதுவே முன் நிற்கும் பொதுவான போராட்டத்தின் மூலம் மட்டுமே என்பது எமது நம்பிக்கையாகும். ஆகவே சிலாபத்துறையில் அல்லது பொத்துவில் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் காணி உரிமைக்காகவூம் அநுராதபுரம் மற்றும் பொலொன்னருவை மாவட்டங்களில் சிறு நீரக நோயினால் அவதியூறும் சிங்கள விவசாய மக்களின் உரிமைகளுக்காகவூம்இ மலையகப் பிரதேச தமிழ் மக்களின் காணி மற்றும் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்காகவூம்இ நாடு; முழுவதும் நுண் கடன் நிறுவனங்களின் மூலம் சூரையாடப்படும் நாட்டின் தமிழ் சிங்களஇ முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காகவூம் நாம் தொடர்ந்து போராடி வருகிறௌம். மக்களது உண்மையான போராட்டங்களை அச்சுருத்தலை பயன்படுத்தி இடை நிறுத்த பயங்கரவாதிகளுக்கும்இ ஆட்சியாளர்களும் இடமளிக்க மாட்டோம்.

பிரபுத்துவ ஆட்சியாளர்கள் இதுவரை மந்திரித்துவந்த ஜனனாயகம் பற்றிய பொய் மந்திரம் இத்துடன் முடிவடையக் கூடும். அடுத்த போட்டி பலமான சர்வாதிகார ஆட்சியாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பதற்காக வேண்டி இருக்கலாம். அதற்கான நிகழ்சி நிரல் தற்பொழுது செயற்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்தும் மிக குறைந்த அளவூ குற்றச் செயல்களைச் செய்த குழுக்களை ஆட்சியில் அமர்த்தும் பொறியில் நாம் சிக்கி விடக் கூடாது. இந்த பிரபுத்துவ முதலாளித்துவ அரசியல் கட்சிகள் எல்லாவற்றையூம் தோட்கடித்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் அதிகாரத்தைக் கட்டியெழுப்பம் ஒரு அரசியல் அமைப்பு கட்டியெழுப்பப்; பட வேண்டும். நாட்டின் அனைத்து மக்கள் குழுக்களினம் உரிமைகள்இ பாதுகாப்புஇ சதந்திரம் மற்றும் பொருளாதார நீதி என்பவற்றை பாதுகாத்துக் கொள்ள முடிவது அதுபோன்ற ஒரு அரசியல் அமைப்பின் மூலம் மட்டுமேயாகும். உண்மையான பிரஜைகள் அமைப்பின் பிரதான பொருப்பாக இருக்க வேண்டியதும் அதுவேயாகும்.

காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு

2019 மே 01 ம் திகதி